உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பெருமங்கலம் அரசு பள்ளியில் சிகரத்தை நோக்கி மேலும் ஒரு படி நிகழ்ச்சி

 பெருமங்கலம் அரசு பள்ளியில் சிகரத்தை நோக்கி மேலும் ஒரு படி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: பெருமங்கலம் அரசு பள்ளியில் 'சிகரத்தை நோக்கி மேலும் ஒரு படி' நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி மேலும் ஒரு படி என்ற தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்றார். விழாவில் ஓய்வு பெற்ற எஸ்.பி., கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிகரத்தை நோக்கி மேலும் ஒரு படி என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். இதில், ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் குழுவாக இணைந்து மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். பெற்றோர்களும் பள்ளிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சிறப்பாக கல்வி கற்று தேர்ச்சி விகித்தை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் கல்வி வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்தி உயர் கல்வி பயின்று வாழ்வில் உயர்ந்த நிலைய அடைய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை