உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா 

கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். விழாவில் எஸ்.பி., சமய்சிங் மீனா, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த உறியடி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று உறியடித்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ