| ADDED : ஜன 10, 2024 11:22 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை நகராட்சி சேர்மன் முருகன் துவக்கி வைத்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக அரசு நேற்று முதல் துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார் ஐந்து முனை சந்திப்பில் உள்ள வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க ரேஷன் கடையில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் பொது மேலாளர் செல்வம் வரவேற்றார்.நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கி ரூ.1,000, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பை குடும்ப அட்டைதாரருக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து நகராட்சியில் உள்ள 9 ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.நகராட்சி துணைச் சேர்மன் உமாமகேஷ்வரிகுணா, தி.மு.க., நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தாசில்தார் மாரியாப்பிள்ளை தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.