உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபைல் சிக்னல் பிரச்னையால் பொதுமக்கள், நோயாளிகள் அவதி: சிறுவங்கூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

மொபைல் சிக்னல் பிரச்னையால் பொதுமக்கள், நோயாளிகள் அவதி: சிறுவங்கூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகட்டடத்தில் 'மொபைல் சிக்னல்' பிரச்னையால் மருத்துவர்கள்,நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஒவ்வொருவருக்கும் மொபைல் போன் தற்போது மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது.மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் குடியிருப்பு, கல்லுாரி மாணவர்கள் விடுதி கட்டடங்களில் 'மொபைலுக்கான சிக்னல் முற்றிலும் கிடைப்பதில்லை. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்கள் அவசர நேரங்களில் வெளியே உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மருத்துவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியவதில்லை.கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் சென்றால் மட்டுமே பேசமுடியும். சிறுவங்கூரில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவங்கியது முதல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 'மொபைல் சிக்னல்' பிரச்னைக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 63 பேர் இதுவரை இறந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. மருத்துவமனைக்கு சிகிச்சையில் வந்திருந்த சிலரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து, மேல்சிகிச்சை புதுச்சேரி, சேலம், விழுப்புரம், சென்னை போன்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயர் சிகிச்சை பெற வெளியூர் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதும், உடன் இருந்தோர் அலறியடித்து கொண்டு தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மொபைல் சிக்னல் பிரச்னையால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாமல் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் வெளியே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சிகிச்சையில் உள்ளவர்களின் நிலைகள் குறித்து உடனக்குடன் அறிந்து கொள்ள முடியாமல், அவர்களாக தெரிவிக்கும் வரை வெளியே குடும்பத்தினர், உறவினர்கள் 'திக்' 'திக்' மனநிலையிலேய உள்ளனர். கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்த சம்பவம் தொடர்பாக அரசுத்துறை உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள், அலுவலர்களுடன் உடனுக்குடன் தகவல்களை கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள், நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருப்போர் என அனைவரும் அவ்வப்போது கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் வந்து பேசி விட்டு செல்லும் நிலைதான் காணப்பட்டது. மொபைல் சிக்னல் பிரச்னையால் கடும் அவதிக்குள்ளாகினர்.கள்ளச்சாராயம் பாதிப்பு தொடர்பாக சென்னையில் இருந்து வருகைபுரிந்த மருத்துவ துறை உயர் அதிகாரிகளிடம், 'மொபைல் நெட்வொர்க்' பிரச்னைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்தனர். எனவே, சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடத்திற்குள் தங்கு தடையின்றி சிக்னல் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் 'மொபைல் டவர்கள்' அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை