| ADDED : ஜன 23, 2024 05:53 AM
கள்ளக்குறிச்சி, : அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டையை யொட்டி, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரலையில் பார்ப்பதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேற்று 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.அதன்படி, கள்ளக்குறிச்சியில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள், தலைமை அஞ்சல் அலுவலகம் போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்கள் நேற்று மதியம் வரை மூடப்பட்டது.அனைத்து அலுவலகங்களின் முன்புறமும் அரை நாள் விடுமுறை என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் இருந்தன. தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு மேல் வங்கிகள், அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டன.