மேலும் செய்திகள்
எஸ்.வி.பாளையம் கிராமத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பு
22 minutes ago
வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு
14-Nov-2025
மின் நிறுத்தம் ரத்து
14-Nov-2025
ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா
14-Nov-2025
கள்ளக்குறிச்சி: வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பி.எல்.ஓ., மொபைல் செயலியில் பதிவேற்றும் பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவமங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பி.எல்.ஓ., மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இப்பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி, சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
22 minutes ago
14-Nov-2025
14-Nov-2025
14-Nov-2025