உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த கட்டடங்கள் அகற்றம்! கோர்ட் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த கட்டடங்கள் அகற்றம்! கோர்ட் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை பொதுப்பணித்துறைஅதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் உள்ள பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து 36 கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற கடந்த 2020-ம் ஆண்டு பொதுபணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் வழக்கினை தள்ளுபடி செய்து 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் கடந்த மே 16ம் தேதி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளவர்களுக்கு தெரிவிக்கும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வருவாய்த்துறை சார்பில், வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டிய அளவு குறித்து கட்டடங்களில் அளவு குறியீடு வரையப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மின்வாரியம் சார்பில் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்த மின் இணைப்புகள் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்டது.இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்ற துவங்கினர். இந்நிலையில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) உதவி செயற்பொறியாளர் மோகன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலை துவங்கியது. அதில் ஒரு டீக்கடை, இரண்டு மருந்து கடைகள் ஆகியவை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றதால், அவருக்கு சொந்தமான 10 கடைகள் மட்டும் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடப்பட்டுள்ளது.மீதமுள்ள 23 கட்டட உரிமையாளர்கள், தாங்களாகவே இடித்து அகற்றிக்கொள்வதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர். உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுமாறும், இல்லையெனில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அரசு சார்பில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தாசில்தார் பிரபாகரன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் விஜயகுமரன், பிரபு, பூங்கொடி, பிரசாத் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை