மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
05-May-2025
அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்
16-May-2025
கள்ளக்குறிச்சி : சேலம்-விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சின்னசேலம் வழியாக செல்லும் விருத்தாசலம்-சேலம் பாசஞ்சர் ரயில் சேவை சில மாதங்களுக்கு முன், கடலுார் வரை நீட்டிக்கப்பட்டது. அதி காலையில் கடலுாரில் துவங்கி சின்னசேலத்திற்கு காலை 7:00 மணிக்கு சென்று, அங்கிருந்து சேலத்திற்கு 9:00 மணிக்கு செல்லும் இந்த ரயிலில்,10க்கும் குறைவான பெட்டிகளே உள்ளன. இந்த ரயில், சேலத்திலிருந்து காலை10:00 மணிக்கு துவங்கி, சின்னசேலம் வழியாக மதியம் விருத்தாசலத்தோடு நிறுத்தப்படும். மீண்டும் விருத்தாசலத்திலிருந்து துவங்கி பகல் 2:00 மணிக்கு, சின்னசேலம் சென்று, அங்கிருந்து சேலம் செல்கிறது. சேலத்திலிருந்து மாலை 6:30 மணிக்கு மேல் புறப்பட்டு சின்னசேலம், விருத்தாசலம் வழியாக கடலுார் வரை செல்கிறது.இந்த ரயிலில் குறைவான பெட்டிகள் இருப்பதால், காலை நேரத்தில் கடலுாரிலிருந்து கிளம்பும் போது, பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கிருந்து விருத்தாசலம் வருவதற்குள் ரயிலில் உள்ள இருக்கைகள் அனைத்தும் நிரம்பி, சின்னசேலம் வரும்போது ஒரு சீட் கூட காலியாக இருப்பதில்லை. இதனால் சின்னசேலத்திலிருந்து சேலம் செல்லும் பயணிகள் நின்றுகொண்டே செல்லும் நிலை உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நிலையங்களிலும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், பயணிகள் நிற்க கூட இடமின்றி, பரிதவிக்கின்றனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், 'இந்த ரயிலில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். அத்துடன் இந்த தடத்தில் கூடுதாக ஒரு பகல் நேர ரயில் சேவையையும் துவக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
05-May-2025
16-May-2025