| ADDED : டிச 10, 2025 08:38 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார். திருக்கோவிலுார் வடக்கு வீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்கும் நோக்கில் முன்னாள் ராணுவ வீரர் கல்யாண்குமார் தனது சொந்த செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார். தலைமை ஆசிரியர் குமுதவல்லி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் துரைராஜ் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வீரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் நாகமணி, மாலதி, விமலா, திரிஷா, அந்தோணியம்மாள், மேரிஜாய் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண் குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.