உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி செய்து காப்பாற்றினால் பரிசு

 விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி செய்து காப்பாற்றினால் பரிசு

கள்ளக்குறிச்சி: சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்து உயிரை காப்பாற்றும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவ முன்வரும் பொதுமக்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசு இணைந்து நல்ல சமாரியன் திட்டம் செயல்படுத்தி வருகிறது. விபத்து ஏற்பட்ட பின் முதல் ஒரு மணி நேரம் மருத்துவ ரீதியாக பொன்னான நேரம் எனப்படுகிறது. அத்தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் உடனடியாக முதலுதவி மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு விபத்து நடந்த உடன் அருகிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனை, டிராமா கேர் மையத்திற்கு சேர்த்த நபர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளன. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கி குறிப்பிட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சேர்த்த நபர் நல்ல சமாரியன் என அழைக்கப்படுவார். ஒவ்வொரு நிகழ்வுக்கும் மத்திய, மாநில அரசு மூலம் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். மேலும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை