உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலூரில் ஆற்று திருவிழா; புதர்களை அகற்ற பா.ஜ., கோரிக்கை

திருக்கோவிலூரில் ஆற்று திருவிழா; புதர்களை அகற்ற பா.ஜ., கோரிக்கை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் மண்டிக்கிடக்கும் நாணல் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நாணல்கள் செழித்து வளர்ந்து, புதர்மண்டியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தை திங்கள் தினத்தில் தென்பெண்ணையாற்றில் நடைபெறும் ஆற்றுத் திருவிழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர்.ஆற்றை ஒட்டி இருக்கும் கிராமங்களிலிருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு ஆற்றுக்கு வரும் என்பதால், திருவிழாவை பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, ஆற்றில் மண்டியுள்ள நாணல் புதர்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருக்கோவிலுார் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை