உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மாநாடு

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மாநாடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க முதல் மாவட்ட மாநாடு நடந்தது. சங்க தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கமலநாதன் வரவேற்றார். மாநில சம்மேளன தலைவர் ஆறுமுகநயினார் கோரிக்கை மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், சி.ஐ.டி.யூ., பொருளாளர் வீராசாமி, மாவட்ட துணை செயலாளர் சாமிநாதன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆன்லைன் அபராதத்தை கை விட வேண்டும், நலவாரிய பயன்களை கிடைக்க எளிதாக அணுக கூடிய வகையில் ஆன்லைன் முறையினை சீர்படுத்துதல், மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குதல், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறுதல், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஓய்வு அறைகள் வழங்குதல், டோல்கேட், இன்ஸ்யூரன்ஸ் கட்டணங்களை குறைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை