உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் அபேஸ்

 ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் அபேஸ்

உளுந்துார்பேட்டை: நவ. 19-: திருநாவலுார் அருகே ஸ்கூட்டர் பெட்டியில் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் வெங்கடேசன், 25; இவர் கெடிலத்தில் சலுான் கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி வேலைக்கு வந்த வெங்கடேசன், கடன் தொகை செலுத்துவதிற்காக ரூ. 25 ஆயிரம் பணம், பான் கார்டு உள்ளிட்டவையை தனது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்துவிட்டு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் 1:00 மணிக்கு வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த பணம், பான் கார்டு திருடுபோனது. இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை