மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழை: 15 வீடுகள் சேதம்
9 minutes ago
தேர் நிறுத்த இடம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
9 minutes ago
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
12 minutes ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் டார்க்கெட் டார்ச்சரை கண்டித்து மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகம் முன், விருத்தாசலம் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் துரை, பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் விஷ்ணுவிஜயன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், அஞ்சல் துறையில் டார்ச்சர் தினம் தினம் அதிகரித்து வருகிறது. சொந்த பணத்தில் சொந்த கணக்குகள் துவங்கப்படுகிறது. ஸ்பிளிட் கணக்குகளை தொடங்க கூடாது எனும் உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை. 8வது ஊதியக்குழு வரம்பிற்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களை சேர்த்திட வேண்டும். தினம் தினம் மேளா என்ற பெயரில் நடக்கும் டார்க்கெட் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
9 minutes ago
9 minutes ago
12 minutes ago