மேலும் செய்திகள்
வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு
14-Nov-2025
மின் நிறுத்தம் ரத்து
14-Nov-2025
ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா
14-Nov-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். சங்கராபுரம் அடுத்த அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீருடன் துர்நாற்றத்துடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் இப்பகுதி மக்கள் காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கால் அவதிப்பட்டு வருகின்றனர். எஸ்.வி.பாளையம் கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தி, இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Nov-2025
14-Nov-2025
14-Nov-2025