திருக்கோவிலுார் வார்டுகளில் 27, 28 தேதிகளில் சிறப்பு கூட்டம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் இரண்டு கட்டங்களாக சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் நாளை 27ம் தேதி 2வது வார்டு முதல், 18வது வார்டு வரையிலும், 28ம் தேதி 1 வது வார்டு மற்றும் 19வது வார்டு முதல் 27ம் வார்டு வரையிலும், வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை எடுத்துரைக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் பிரதான 3 கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இத்தகவலை நகர மன்ற தலைவர் முருகன், நகராட்சி கமிஷனர் திவ்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.