உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு

 கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆண்டில் 14,051.55 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த அரையாண்டில் மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 6,918.34 கோடி ரூபாயும், சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 599.44 கோடி ரூபாயும் மற்ற கடன்கள் 331.57 கோடி ரூபாயும், மகளிர் சுய உதவிகளுக்கு 407.46 கோடி ரூபாய் என மொத்தம் 7,849.35 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் ஆண்டிற்கு மாவட்டத்தில் 14,051.55 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் கடந்தாண்டை விட மிக கூடுதலாக கடன் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களுக்கும் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை