உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டீ கடைக்காரர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

டீ கடைக்காரர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே டீ கடைக்காரரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் மகன் ஆனந்தன், 31; அம்மன் கொள்ளை மேடு பஸ் ஸ்டாப் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை கடையை திறக்காததால் சந்தேகம் அடைந்த, அவரது தம்பி திருமூர்த்தி மற்றும் உறவினர்கள் 11.00 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, ஆனந்தன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் குடும்பத்தினர் மற்றும் ஜி.அரியூர் பொதுமக்கள் அம்மன்கொல்லைமேடு பஸ் ஸ்டாப் அருகே தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய கோரி உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.திருக்கோவிலுார் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் திருக்கோவிலுார்- ஆசனுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஜி.அரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ