உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளனர். உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தில் இருசாயி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்து மூடப்பட்டது. நேற்று காலை கோவில் கதவு பூட்டு உடைத்து திறந்து கிடந்தது. பக்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவுகளை சேகரித்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை