மேலும் செய்திகள்
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
5 minutes ago
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
10 minutes ago
திருக்கோவிலுார்: தொடர் மழையின் காரணமாக அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கான விளைபொருட்களின் வரத்து நேற்று முற்றிலும் தடைபட்டது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியில் முன்னிலை வகிப்பது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கமிட்டிக்கான விளை பொருட்களின் வரத்து குறைந்திருந்தது. நேற்று பொருட்கள் ஏதும் ஏலத்திற்கு வரப்படாததால் கமிட்டி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று அரகண்டநல்லுார் மற்றும் திருக்கோவிலுாரின் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விலகி, தெளிவான வானிலை காணப்பட்டதால் வரும் நாட்களில் கமிட்டிக்கான வரத்து அதிகரிக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
5 minutes ago
10 minutes ago