உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

ரிஷிவந்தியம்: முட்டியம் கிராமத்தில் இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த முட்டியம் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சந்திரா,50; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் என்பவருக்கும் ஏற்கனவே இடப்பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி இடத்தை அளந்த போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது பிச்சைக்காரன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த இரண்டு பேர் சேர்ந்து, சந்திராவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், முட்டியம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன்கள் பிச்சைக்காரன், ஏழுமலை,38; ஜெய்சங்கர் மனைவி பொன்னம்மாள் ஆகிய 3 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, அதில் ஏழுமலையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை