உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி துாக்கு போட்டு தற்கொலை; மூங்கில்துறைப்பட்டில் சோகம்

 கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி துாக்கு போட்டு தற்கொலை; மூங்கில்துறைப்பட்டில் சோகம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே கணவன் இறந்த மூன்று நாட்களில் மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தை சேர்ந்தவர் சிவா, 40; மூங்கில்துறைப்பட்டு தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி ஷர்மிளா, 29; மகள்கள் சஞ்சனா, 9; மது ஸ்ரீ, 7; மற்றும் 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 19ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சிவா இறந்தார். கணவன் இறந்த துக்கத்தில் இருந்த ஷர்மிளா மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் நேற்று மாலை ஷர்மிளா வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஷர்மிளா உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வட பொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். தாய் தந்தை இருவரையும் 3 குழந்தைகள் இழந்திருப்பது கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ