உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சின்னசேலத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மும்முரம்

 சின்னசேலத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மும்முரம்

சின்னசேலம்: சின்னசேலம் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தாசில்தார்கள் வினோத்பாபு, நளினி, கனகபூரணி ஆகியோர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேசன், சுமதி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் சின்னசேலம், வடக்கனந்தல், நயினார்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 178 பாகங்களிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக சிறப்பு தீவிர திருத்த பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. சின்னசேலம் பேரூராட்சியில் விஜயபுரம், காந்தி நகர், டேனிஷ் மிஷன் பள்ளி பகுதியில் வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரில் அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ