உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் டிச., 4க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

 வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் டிச., 4க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை புகைப்படம் ஒட்டி முழுமையாக பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒப்படைக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார், அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வாக்காளர்கள் தாங்கள் பெற்ற கணக்கெடுப்பு படிவத்தினை புகைப்படம் ஒட்டி முழுமையாக பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, பொதுமக்களாகிய வாக்காளர்கள் தாங்கள் பெற்ற கணக்கெடுப்பு படிவத்தினை புகைப்படம் ஒட்டி, முழுமையாக பூர்த்தி செய்து, வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை