| ADDED : ஜன 21, 2024 04:59 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 3 மகள்களுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 38; இவரது மனைவி சிவகங்கை, 36; இவர்களுக்கு கீதா, 17; ஜனனி, 14; மோகனாஸ்ரீ, 11; ஆகிய 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வசித்து வருகின்றனர். பிள்ளைகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.சிவகங்கை, பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு அதே ஊரில் இருக்கும் தாய் குப்புவின் வீட்டிற்கு, விடுதியில் தங்கியிருந்த 3 மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.கடந்த 17ம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து பேசி சிவகங்கை மற்றும் மகள்களை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்தவர்கள், 18ம் தேதி அதிகாலை வெங்கடேசன் பார்த்தபோது, சிவகங்கை மற்றும் 3 மகள்களும் காணாமல் போனது தெரியவந்தது.இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.