உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு வடமாமாந்துாரில் திருமணமாகி 5 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமாந்துாரைச் சேர்ந்த அலோசியஸ் அன்புதேவா மனைவி ஆண்டோ ஆரோக்கிய சகாயராணி, 22; இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து அதே கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 9 தேதி வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் ஆண்டோ ஆரோக்கிய சகாயராணியை மீட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !