உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

ரிஷிவந்தியம் : வாணாபுரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மனைவி வீரம்மாள், 67; இளையனார்குப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி அஞ்சலை, 57; ஆகிய இருவரும் வெவ்வேறு பகுதியில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை