| ADDED : நவ 26, 2025 07:53 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில் பாலின சமத்துவதற்கான தேசிய அளவிலான பிரசாரம் நேற்று துவங்கியது. வரும் டிசம்பர் 23ம் தேதி வரை நடக்கிறது. துவக்க விழாவில், கலெக்டர் பிரசாந்த் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்பது, பெண் குழந்தைகளை காப்ப்பது. பெண் சிசு கொலையை தடுப்பது. குழந்தை திருமணத்தை தடுப்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மகளிர் சுய உதவிக்குழுவிரன் உட்பட பலர் பங்கேற்றனர்.