உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 22 கவுன்சிலர்கள் வார்டு வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி

22 கவுன்சிலர்கள் வார்டு வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், 22 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இந்த 22 கவுன்சிலர் வார்டுகளிலும், ஒன்றிய பொது நிதியின் கீழ், முக்கிய அடிப்படை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஒவ்வொரு கவுன்சிலர் வார்டுக்கும், தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி கூறியதாவது:'முன்னுரிமை அடிப்படையில், முக்கிய தேவைக்கான பணிகள் மேற்கொள்ளத்தக்க வகையில், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ரூ.5 லட்சம் செலவில், எத்தகைய பணிகள் செய்ய இயலுமோ, அதற்கேற்ப, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கான பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ