உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கம்யூ., கட்சியினர் 158 பேர் கைது

கம்யூ., கட்சியினர் 158 பேர் கைது

காஞ்சிபுரம்:மத்திய அரசின் பட்ஜெட்டில், உர மானியம், உணவு மானியம் ரத்து, தமிழகம் புறக்கணிப்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு போன்றவற்றை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் , காஞ்சிபுரம் தேரடி, பெரியார் துாண் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர்.இப்பகுதிகளில், 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.எனவே, மறியல் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 108 பேர் என, 158 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ