மேலும் செய்திகள்
விவசாயிகள் தின விழா
1 hour(s) ago
சென்னை : சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை 10:15 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்துஅனுவாராட் விரைவு ரயில் வந்தது.இந்த ரயிலில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமனஅதிகாரி சதீஷ்குமார் தலைமையில் ஊழியர்கள், அதிரடி ஆய்வு நடத்தினர்.இந்த சோதனையில் 26 'தெர்மோகோல்' பெட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றினுள், கிலோ கணக்கில் சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி இருந்தது.கைப்பற்றப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சியின் மதிப்பு 12 லட்சம் ரூபாய்.இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:ராஜஸ்தான் மாநிலம், சிக்கந்தர் என்ற ஊரில் ஆடுகளை வெட்டியுள்ளனர். அங்கிருந்து, 250 கி.மீ., தொலைவில் உள்ள ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திற்கு, 'தெர்மோகோல்' அட்டை பெட்டிகளில் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து இறைச்சி, சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதன்படி, கணக்கிட்டால் ஆடு வெட்டப்பட்டதில் இருந்து இன்று வரை, 4 நாட்களுக்கு மேலாக ரயில் பயணத்தில், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.இந்த இறைச்சியை சென்னையில் உள்ள பல கடைகளுக் வினியோகிப்பதற்காக உரிய மருத்துவ சான்றிதழ் இல்லாமல், கொண்டு வந்துள்ளனர். எந்தெந்த கடைகளுக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது குறித்து விசாரித்துவருகிறோம்.பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகள், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மதுரை நோக்கி செல்லும் ரயிலில், இறக்கப்படாத பெட்டிகள் குறித்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.போலி முகவரி வாயிலாக, இறைச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினார்.
1 hour(s) ago