உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உண்டியல் பணம் திருடிய 2 பெண் ஊழியர்கள் சிக்கினர்

உண்டியல் பணம் திருடிய 2 பெண் ஊழியர்கள் சிக்கினர்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கை 30 நாட்களுக்குள் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டு வருகிறது.நேற்று திருத்தணி முருகன் கோவிலில் அறங்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் பொறுப்பு அருணாச்சலம், அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு மற்றும் நாகன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியலை திறந்து, பணம், தங்கம், வெள்ளி போன்றவை தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டன. இப்பணியில், திருத்தணி முருகன் கோவில் உள்பட, 29உபகோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அப்போது, முருகன் கோவிலில், 13 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரியும், நாகபூண்டி சேர்ந்த வைஜெயந்தி 44, சுருதி வாசிக்கும் வீரமங்கலத்தை சேர்ந்த தேன்மொழி, 35 ஆகிய இருவரும் உண்டியல் பணம் எண்ணும் போது, 1 லட்சத்து, 15 ஆயிரத்தி, 790 ரூபாயை எடுத்து தங்களது புடவையில் மறைத்து வைத்திருந்தனர். அதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கோவில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது கோவில் இணை ஆணையர்திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ