உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 5,170 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

5,170 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், ஓ.எம். மங்கலம் கிராமத்தில், பொது வினியோகத் திட்டத்தின் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் வட்ட வழங்கள் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் இரு தினங்களுக்கு முன் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஓ.எம். மங்கலம், பஜனை கோவில் தெருவில், ஜானகிராம் என்பவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 4,270 கிலோ பொது வினியோக திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல, குமுதா என்பரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 கிலோ அரிசி உட்பட, மொத்தம் 5,170 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ