| ADDED : மே 03, 2024 12:49 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் 'பாஸ்' அமைப்பு சார்பில் நடந்த ரத்தான முகாமில் பெறப்பட்ட 73 யூனிட் ரத்தம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கிவரும் 'பாஸ்' தொண்டு அமைப்பினர், மரம் வளர்த்தல் ரத்ததானம், கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் 'மே 1'தொழிலாளர் தினத்தையொட்டி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து, 62வது ரத்ததான முகாம் ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 73 தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். தானமாக பெறப்பட்ட, 73 யூனிட் ரத்தம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கப்பட்டது.