உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி வரதர் தேரோட்டத்திற்கு 750 போலீசார் பாதுகாப்பு பணி

காஞ்சி வரதர் தேரோட்டத்திற்கு 750 போலீசார் பாதுகாப்பு பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கருட சேவை நிறைவு பெற்று, இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், மின் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு, தற்காலிக மின் இணைப்பு துண்டிக்க மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மேலும், தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு, தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதுதவிர, காஞ்சிபுரம் எஸ்.பி.,சண்முகம் தலைமையில், 750 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதுதவிர, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, வேலுார் ஆகிய மார்க்கங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஒலிமுகமதுபேட்டையிலும். செங்கல்பட்டு, மாமல்லபுரம் ஆகிய பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் பெரியார் நகர் பகுதியிலும். வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் செவிலிமேடு பகுதியிலும். உத்திரமேரூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஓரிக்கை பகுதியிலும் பேருந்துகள் நிறுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ