உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், திருப்பாற்கடல் குடிநீர் அபிவிருத்தி திட்டம், வேகவதி நீருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட 'பைப்லைன்' வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையம் அமைந்துள்ள சாலபோகம் செல்லும் சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப் என்பதால், அவற்றின் உறுதித்தன்மை குறைந்து, ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால், பழைய பைப்களை அகற்றிவிட்டு புதிய பைப்கள் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ