உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

உத்திரமேரூர்:இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், சென்னை தாம்பரத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு, நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் வயல்வெளி பகுதியில், நேற்று காலை 10:00 அளவில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த மூன்று விமானிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.இதையடுத்து, தாம்பரம் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மற்றொரு ஹெலிகாப்டர் சாலவாக்கம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.அதில் வந்த 11 ஊழியர்கள், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது சரிசெய்தனர். இதையடுத்து, மூன்று மணி நேரத்திற்குப் பின், இரண்டு ஹெலிகாப்டர்களும் புறப்பட்டுச்சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி