உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏ.டி.எம்., உடைக்க முயற்சி செங்குன்றம் நபர் சிக்கினார்

ஏ.டி.எம்., உடைக்க முயற்சி செங்குன்றம் நபர் சிக்கினார்

செங்குன்றம்:செங்குன்றம் புறவழிச்சாலை, காமராஜ் நகரில், எச்.டி.எப்.சி., வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 1:45 மணி அளவில் நுழைந்த மர்மநபர், கண்காணிப்பு கேமராவை பார்த்து ஏதோ பேசினார். அதன் பின், சில நிமிடங்கள் ஏ.டி.எம்., மிஷினை திறக்க முயற்சித்தார்; திறக்க முடியவில்லை.அதன்பின் வெளியே சென்று, பெரிய கல்லை எடுத்து வந்து மிஷினை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை, வங்கியின் தலைமை பாதுகாப்பு கட்டுப்பாட்டறை பணியில் இருந்தவர்கள், கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டனர்.உடனே, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, ரோந்து பணியில் இருந்த செங்குன்றம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது மர்ம நபர் சிக்கினார். விசாரணையில், செங்குன்றம் அடுத்த வடகரை, பாடசாலை தெருவைச் சேர்ந்த அலெக்சாண்டர், 44, என்பது தெரியவந்தது.மேலும் விசாரணையில், 'என்னிடம் இருந்த காசில் சரக்கு அடித்து விட்டேன். செலவுக்கு பணம் இல்லை. அதனால் தான் இங்கிருந்து எடுக்க வந்தேன்' என, மது போதையில் தெரிவித்துள்ளார். வங்கி நிர்வாகத்தின் புகாரையடுத்து, அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை