உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி அரிசி வியாபாரி பலி

வாகனம் மோதி அரிசி வியாபாரி பலி

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45. இவர், பொன்னேரிக்கரை - பரந்துார் சாலையில், டீக்கடை மற்றும் அரிசி கடை நடத்தி வந்தார்.இந்நிலையில், 'ஹோண்டா ஆக்டிவா' வாகனத்தில், தனியார் மருத்துவக் கல்லுாரி எதிரே நேற்று முன்தினம் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரது வாகனம் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசில், அவரது மகன் கோகுல் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை