உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் மூழ்கி வாலிபர் மாயம்

குளத்தில் மூழ்கி வாலிபர் மாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளத்தில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 'இன்போடெக் டிரான்ஸ்பார்மர்' என்ற தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.இங்கு, 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இங்குள்ள ஊழியர்கள் பணியை புறக்கணித்து கம்பெனி வாசலில் போராடி வருகின்றனர். இதனால், கடந்த மாதம் 28ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களில் 30 பேர், நேற்று மதியம் கம்பெனி எதிரே உள்ள ராஜகுளத்தில் குளிக்க சென்றனர்.அப்போது, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 45, நீரில் மூழ்கினார். சக ஊழியர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுந்தரமூர்த்தியை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை