| ADDED : ஆக 17, 2024 01:17 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியான நேற்று காலை 7:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், காலை 9:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.காஞ்சிபுரம் கன்னிகாபுரம் கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகமும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தது.காஞ்சிபுரம் புத்தேரி தெரு, சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் காஞ்சிபுரம் ஓரிக்கை, கண்ணகிபுரம படவேட்டம்மன், பச்சையம்மன், துர்கையம்மன் கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜைம் நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடி சுக்ல பக்க்ஷ ஏகாதசியையொட்டி நேற்று மாலை தாயார், பெருமாள் புறப்பாடு நடந்தது. காஞ்சிபுரம் செங்குந்தர் பூவசரந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், குதிரை வாகனத்தில், கருப்பசாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் சேக்குபேட்டை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தது. தொடர்ந்து வழக்காடு மன்றம் நடந்தது.காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி நேற்று மாலை அமிர்தவல்லி தாயார் புறப்பாடும், ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.