உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பட்டாவுக்கு பயனாளிகள் அலைக்கழிப்பு

பட்டாவுக்கு பயனாளிகள் அலைக்கழிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு வருவாய் கோட்டங்களின்கீழ், ஐந்து தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில், பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு செய்வது, பட்டா பெயர் திருத்தம், யூடிஆர் எனப்படும் நிலவுடமை மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட பட்டாவில் திருத்தம் செய்வது என, பல சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த பணிகள், மனுதாரரின் ஆவணங்களை சரி பார்த்து, பட்டா வழங்குவது, பெயர் மாற்றம் செய்வது மேற்கொள்ளப்படும். பட்டா பெயர் திருத்தம் போன்ற பணிகள், தாலுகா அலுவலகங்களில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து கோப்புகள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறான வருவாய் துறை பணிகள், தாலுகா அலுவலகங்களில், மெத்தனமாகவும், அலட்சியமாக அதிகாரிகள் செயல்படுவதால், மனுதாரர்கள் அலைகழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தாலுகா அலுவலகங்களில், மனு அளித்து மாதக்கணக்கில் ஆன போதும், நடவடிக்கை இன்றி மனுக்கள் பல கிடப்பில் இருப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் பல கோப்புகள் தேங்கி இருப்பதாகவும், பட்டா திருத்தம் போன்ற பணிகள் கிடப்பில் இருப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.காஞ்சிபுரம் நகர்ப்புற பட்டாக்கள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டு, ரெகுலர் தாசில்தாரிடம், ஒப்படைக்கப்பட்ட பின் பல பணிகள் மெத்தனமாக செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.இடத்தை அளக்க வேண்டும் என்றாலும், பட்டா சம்பந்தமான மனுக்கள் என்றாலும் மாதக்கணக்கில் அலைய வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.எனவே, பட்டா தொடர்பான மனுக்கள் மீது, மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை