| ADDED : ஜூலை 02, 2024 11:40 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் கிராமத்தில், ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி அருகில், வல்லம் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா மாற்றம், ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற, தினமும் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே புதர் மண்டி உள்ளது. புதர் நடுவில் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், பாம்பு, விஷப்பூச்சிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் அருகில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைக்குள் விஷஜந்துகளின் நடமாட்டம் உள்ளது.எனவே, வி.ஏ.ஓ., அலுவலகத்தின் எதிரே உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, சான்றிதழ்கள் பெற வருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.