உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நிறைவு

கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனாகிய கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு, சிம்ம வாகனத்திலும் அம்பிகையுடன் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் வீதியுலா வந்தார். இதில், இரண்டாம் நாள் உற்சவமான ஏப்., 17ம் தேதி காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வந்தார்.இதில், ஏழாம் நாள் உற்சவமான, கடந்த மாதம் 22ம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. இதில், 10ம் நாள் உற்சவமான வெள்ளி தேரோட்டம், கடந்த மாதம் 25ம் இரவு விமரிசையாக நடந்தது. இதில், விடையாற்றி உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் மங்களகிரி கேடய உற்சவமும், நேற்று சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன், 18 நாட்களாக நடந்து வந்த, சித்திரை உத்திரப் பெருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை