உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒப்பந்ததாரர் பெயர் குறிப்பிடாமல் பேருந்து நிறுத்த கட்டணம் வசூல்

ஒப்பந்ததாரர் பெயர் குறிப்பிடாமல் பேருந்து நிறுத்த கட்டணம் வசூல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையோர கடை வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது என, பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் தனியார், அரசு பேருந்துகளுக்கு, கட்டணம் வசூலிக்கும் உரிமையை, மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு வழங்கியுள்ளது.ஒப்பந்தம் எடுத்த நபர், அதற்கான கட்டண ரசீதில், ஒப்பந்ததாரர் பெயர் கூட குறிப்பிடாமல், பேருந்துகளுக்கு தலா 25 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் சராசரியாக, ஒரு நாளைக்கு, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.ஆனால், பேருந்துகளுக்கு வழங்கப்படும் ரசீதில், ஒப்பந்ததாரர் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, பேருந்து ஊழியர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஒப்பந்தம் எடுப்போருக்கு விதிமுறைகளை பின்பற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியும், ஒப்பந்ததாரர் பெயர் குறிப்பிடாமல் அலட்சியமாக உள்ளனர்.பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர், தனது பெயரை குறிப்பிடாமல், கட்டணம் வசூலிப்பது விதிமீறல் என, பேருந்து ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ