| ADDED : ஜூன் 06, 2024 01:33 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில், 2024- - 25ம் ஆண்டுக்கான நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் துவங்கி நடைபெறுகின்றன. ஊராட்சிகள் தோறும், பொதுக் குளம் மற்றும் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.புதிய குளங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் தற்போது புதியதாக குளம் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரம் கிராமத்தில் புதிதாக அமைக்கும் குளத்தின் பணிகளை திட்ட இயக்குனர் ஜெயகுமார் ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் பணி மேற்கொள்ள வேண்டிய முறைகள், பணிக்கு பயன்படுத்த வேண்டிய கருவிகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.தொழிலாளர்களின் பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் இருப்பு குறித்து பணிதள பொறுப்பாளர் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் ஆகியோரிடத்தில் கேட்டறிந்தார்.உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பவானி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.