உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் சிப்காட் சாலையில் சேதமடைந்த மின்கம்பம்

ஒரகடம் சிப்காட் சாலையில் சேதமடைந்த மின்கம்பம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரகடம் சிப்காட் சாலை வழியே எறையூர் கிராமத்திற்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.தவிர, இங்குள்ள தொழிற்சாலை ஊழியர்கள் சிப்காட் சாலை வழியே நடந்து செல்கின்றனர்.இந்த சாலையில் உள்ள மின்கம்பம் உடைந்து சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், மின்கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, சிப்காட் சாலையோரம் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க, ஒரகடம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி