உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஐதர்பட்டரை தெரு, செல்வ விநாயகர், சோமாஸ்கந்தர், ராஜ ராஜேஸ்வரி, ஆகாய கன்னியம்மன் கோவிலில், 50வது ஆண்டு தீமிதி விழா மற்றும் ஆடி திருவிழா நேற்று நடந்தது.இதையொட்டி, கடந்த 5ம் தேதி பரஞ்சோதி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, காப்பு கட்டும் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்வும், கடந்த 9ம் தேதி மாரியம்மன், மாகாளியம்மன் வீதியுலாவும் நடந்தன.நேற்று காலை 9:00 மணிக்கு கன்னியம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வந்தார். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது.இன்று இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பம், 10:30 மணிக்கு அலமகாசூரன் அமிர்தவள்ளி திருமணம் நாடகம் நடைபெறுகிறது.அதேபோல், காஞ்சிபுரம் முல்லா பாளையம் தெருவில், செல்வ விநாயகர், துர்க்கை அம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில், தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா நேற்று நடத்தப்பட்டது.நேற்று காலை 10:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய தும்பவனம் மாரியம்மன் வீதியுலாவும் நடந்தது.இன்று காலை அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கொள்ளு கஞ்சி வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி ரோடு, படவேட்டம்மன், ஆகாய கன்னி அம்மன் கோவிலில், 51ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.கடந்த 8ம் தேதி ஜலம் திரட்டுதலும், 9ம் தேதி திருவிளக்கு பூஜையும், நேற்று காலை அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடப்பட்டது.காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில், தும்பவனத்தம்மனுக்கு 27வது ஆண்டு ஆடி விழா நேற்று நடந்தது. நேற்று காலை அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு கும்பம் படையலும் நடந்தது.காஞ்சிபுரம் பரஞ்சோதியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. காமாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ