உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கு 15வது ஆண்டு ஆடித் திருவிழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் தெருவில் உள்ள கோயிலாத்தம்மனுக்கு 61ம் ஆண்டு கூழ்வார்த்தல் விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், நேற்று, மதியம் 1:30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை 6:00 மணிக்கு ஊரணி பொங்கல் விழாவும், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பும் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன் ஆடி மாதம் 18ம் நாளையொட்டி, காவேரி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூழ்வார்த்தும், கும்பம் படையலிட்டும் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ