உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் வாசலில் நெரிசலில் சிக்கும் பக்தர்கள்

கோவில் வாசலில் நெரிசலில் சிக்கும் பக்தர்கள்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செவ்வாய், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் பக்தர்களை வரிசைப்படுத்த கோவிலில் ஊழியர்கள், போலீசார் நியமிப்பதில்லை.இதனால், கோபுரம் நுழைவாயில் பகுதியில் கூட்டமாக நின்று மூலவரை தரிசனம் செய்வதால், கோவிலுக்கு உள்ளே சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள், வெளியில் இருந்து உள்ளே செல்லும் பக்தர்களும் நெரிசலில் சிக்குகின்றனர்.குறிப்பாக, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர் நெரிசலில் சிக்கி வெளியே வரவும், உள்ளே செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கோவிலில் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் நெரிசலை தவிர்க்க பக்தர்களை வரிசைப்படுத்தவும், கோபுரம் நுழைவாயில் பகுதியில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி